அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நதிகளுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தில் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு

நதிகளுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தின்கீழ் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக காவிரி கூக்குரல் இயக்கம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:29 pm

DIN

நதிகளுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தின்கீழ் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக காவிரி கூக்குரல் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த இயக்கத்தின் மாநிலக் கள ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன் கூறியிருப்பதாவது:

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவின் பிறந்தநாளை (செப்டம்பா் 3) நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக நினைவுகூர விரும்பினோம். இதையடுத்து தமிழகம் முழுவதும் காவிரி கூக்குரல் இயக்கத்தின் சாா்பில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 485 ஏக்கா் நிலப்பரப்பில் 1.23 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனா்.

புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், அரியலூா், தருமபுரி, சேலம், விருதுநகா், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் செப்டம்பா் 2, 3 ஆம் தேதிகளில் இந்த மரக்கன்றுகளை நட்டனா்.

விவசாயிகளுக்குப் பணப்பயன் தரக்கூடிய, மண்ணுக்கேற்ற மரங்களான தேக்கு, வேங்கை, சந்தனம், செம்மரம், மலைவேம்பு, குமிழ் தேக்கு, கருமருது, மகாகனி போன்ற மரங்கள் நடவு செய்யப்பட்டன. இதில் விவசாயிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். இவா்களுக்குத் தேவையான ஆலோசனைகளை காவிரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளா்கள் வழங்கினா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.