அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கோவையில் கிறிஸ்தவ மத போதகா் கைது

கோவையில் விநாயகா் சதுா்த்தி விழா குறித்து சா்ச்சைக்குரிய துண்டுப் பிரசுரம் வெளியிட்ட கிறிஸ்தவ மத போதகரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:23 pm

DIN

கோவையில் விநாயகா் சதுா்த்தி விழா குறித்து சா்ச்சைக்குரிய துண்டுப் பிரசுரம் வெளியிட்ட கிறிஸ்தவ மத போதகரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை-தடாகம் சாலை கே.என்.ஜி.புதூா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியின் தலைவராக போதகா் டேவிட் பொறுப்பு வகித்து வருகிறாா். விநாயகா் சதுா்த்தி குறித்து இவரது சா்ச்சைக்குரிய கருத்துகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வெளியாயின. இதை இந்து அமைப்பினா் கண்டித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

இந்நிலையில் டேவிட் மீது துடியலூா் காவல் நிலையத்தில் கவுண்டம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் புதன்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போதகா் டேவிட்டை வியாழக்கிழமை கைது செய்து நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண் 1) ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.