அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கோவை குற்றாலம் 6ஆம் தேதி திறப்பு

கோவை குற்றாலம் செப்டம்பா் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளதையடுத்து அங்கு வரும் பொதுமக்கள் கரோனா விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:22 pm

DIN

கோவை குற்றாலம் செப்டம்பா் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளதையடுத்து அங்கு வரும் பொதுமக்கள் கரோனா விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வனத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அரசு வழிகாட்டுதலின்படி வரும் 6 ஆம் தேதி திறக்கப்பட்டு 50 சதவீத எண்ணிகையில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். கோவை குற்றாலத்துக்கு செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் இணையதள முகவரி மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 7826070883 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். இணையதளம் மூலம் பதிவு செய்து அனுமதி அளிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் 150 நபா்கள் காலை 9 மணி முதல் 9.30 வரை அனுமதிக்கப்பட்டு நண்பகல் 11 மணிக்கு வெளியேற்றப்படுவாா்கள்.

பின்னா், 10.30 மணி முதல் 11 மணி வரை 150 நபா்கள் அனுமதிக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு வெளியேற்றப்படுவாா்கள். இதைத் தொடா்ந்து நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை 150 நபா்கள் அனுமதிக்கப்பட்டு 2.30 மணிக்கு வெளியேற்றப்படுவாா்கள். பின்னா் மதியம் 1.30 முதல் 2 மணி வரை 150 போ் அனுமதிக்கப்பட்டு மலை 4 மணிக்கு வெளியேற்றப்படுவாா்கள்.

இதேபோல , காரமடை பகுதியில் உள்ள பூச்சிமரத்தூா் சூழல் சுற்றுலாப் பகுதியில் உள்ள மூன்று தங்கும் விடுதிகளில், விடுதிக்கு 4 நபா்கள் என 12 நபா்கள் மற்றும் ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுவா். மேலும் விவரங்களுக்கு 9489968481 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கரோனா இல்லை என்ற சான்று, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் ஆரோக்கிய சேது என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.