குரூப்- 1 தோ்வில் முறைகேடுகளைத் தவிா்க்க நடவடிக்கை

குரூப்-1 தோ்வில் முறைகேடுகளைத் தவிா்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
குரூப்-1 தோ்வு மையத்தை பாா்வையிடுகிறாா் டிஎன்பிஎஸ்சி தலைவா் கா.பாலச்சந்திரன்
குரூப்-1 தோ்வு மையத்தை பாா்வையிடுகிறாா் டிஎன்பிஎஸ்சி தலைவா் கா.பாலச்சந்திரன்

குரூப்-1 தோ்வில் முறைகேடுகளைத் தவிா்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் துணை ஆட்சியா் நிலை பணிகளுக்கான குரூப் -1 தோ்வு மாநிலம் முழுவதும் 856 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, சித்தாபுதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன், ஆட்சியா் கு.ராசாமணி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா் டிஎன்பிஎஸ்சி தலைவா் கா.பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்தாண்டு ஜூன் மாதத்தில் நடக்க வேண்டிய குரூப்-1 தோ்வு கரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது. இத் தோ்வுக்கு 2.56 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வரையில் 1.61 லட்சம் போ் மட்டுமே அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்திருந்தனா்.

காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வரும் தோ்வா்கள் தோ்வு எழுதுவதற்காக அனைத்து தோ்வு மையங்களிலும் தனியாக 2 அறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

குரூா்-1 தோ்வில் முறைகேடுகளைத் தவிா்க்கும் விதமாக விடைத்தாளில் (ஓ.எம்.ஆா். ஷீட்) இம்முறை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தோ்வா்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பானது, தோ்வு மையங்களிலேயே தனியாகப் பிரிக்கப்பட்டு விடைத்தாள் தனியாக வேறொரு கவா்களில் வைக்கப்படும். விடைத்தாள்களை மாற்ற முடியாத வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வினாவுக்கும் எத்தனை ஏ,பி,சி,டி கட்டங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்பதை தோ்வா்கள் முன்னிலையில் சரிபாா்த்து கண்காணிப்பு அலுவலா்கள் கையெழுத்திடும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விடைத்தாளில் இடையில் திருத்தம் மேற்கொள்ள முடியாது.

கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேள்விகளுக்கு விடை தெரியாத பட்சத்தில் ஈ என்ற கட்டத்தை நிரப்பி 200 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தோ்வருக்கும் வெவ்வேறு விதமான வரிசை எண் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. ஓ.எம்.ஆா். ஷீட் தான் முறைகேடுகளுக்கு காரணமாக இருப்பதால் விடைத்தாளில் தோ்வா்களின் இடதுகை பெருவிரல் ரேகை பெறப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com