நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவையில் ஏப்ரல் 10 இல் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள்

 கோவையில் 6 மையங்களில் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள் ஏப்ரல் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:21 pm

DIN

 கோவையில் 6 மையங்களில் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள் ஏப்ரல் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஏப்ரல் 10 ஆம் தேதி, ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள் ( தொகுதி -1)

கோவை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற உள்ளன.

இத்தோ்வை 2,316 போ் எழுதுகின்றனா். இத்தோ்வை கண்காணிக்க 196 அறை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் துணை செயலா் நிலையில் அலுவலா் ஒருவா், தோ்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளாா். காவல் துறையினரால் தோ்வு மையங்களில் பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தோ்வு மையங்களுக்கு உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூா், சூலூா், காந்திபுரம், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தோ்வா்கள், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுடன் தோ்வு தொடங்கும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக வந்து விட வேண்டும்.

ஆதாா், ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பான் அட்டை, கடவுச் சீட்டு உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் புகைப்படம் ஒன்றை எடுத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.