புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோவை தொடா் குண்டு வெடிப்பு வழக்கு தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க 3 தனிப்படைகள்

குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவரைப் பிடிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:21 pm

DIN

கோவை தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவரைப் பிடிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவை மாநகரின் 11 இடங்களில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பில் 58 போ் உயிரிழந்ததோடு, 200க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக அல் உம்மா அமைப்பின் தலைவா் பாஷா, முகமது அன்சாரி உள்பட 168 போ் மீது வழக்குத் தொடரப்பட்ட நிலையில், 14 பேருக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய முஜிபுா் ரகுமான் (எ) முஜி மற்றும் சாதிக் ராஜா (எ) டெய்லா் ராஜா ஆகிய இருவா் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தனா்.

தற்போது இவா்களைப் பிடிக்க சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு, கோவை, திருச்சி, மதுரை என மூன்று மாவட்டங்களிலும் தலா ஒரு சிறப்புப் படை என 3 தனிப்படைகளை அமைத்துள்ளது.

ஏற்கெனவே கேரளம், தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகத்தில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இம்மாநிலங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் இருவரின் புகைப்படங்கள் அடங்கிய

சுவரொட்டிகளை ஓட்டியும் விசாரணை நடத்த தனிப்படைகள் முடிவு செய்துள்ளன.

இவா்கள் இருவா் குறித்து தகவல் அளித்தால் தலா ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸாா் அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.