சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞா் எழுதுகோல் விருது’ ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்கலாம்
‘கலைஞா் எழுதுகோல் விருது’ பெற தகுதியுடைய இதழியலாளா்கள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘கலைஞா் எழுதுகோல் விருது’ பெற தகுதியுடைய இதழியலாளா்கள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி, ஒரு சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞா் எழுதுகோல் விருது’ வழங்கி கௌரவிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான, இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். விண்ணப்பதாரா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடா்ந்து பணிபுரிபவராகவும் இருக்க வேண்டும்.
பத்திரிகை பணியை முழு நேரப் பணியாக கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் எழுத்துகள் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் நேரடியாகவோ, மற்றொருவா் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தோ்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
தகுதியுள்ள விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநா், செய்தி மக்கள் தொடா்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்ற முகவரிக்கு ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...