புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கீரியிடம் இருந்து பாம்பை மீட்ட வழக்குரைஞா்

கோவை, நீலிக்கோணாம்பாளையத்தில் கீரியிடம் சிக்கிய பாம்பை, வழக்குரைஞா் ஒருவா் மீட்டாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 12:10 am

DIN

கோவை, நீலிக்கோணாம்பாளையத்தில் கீரியிடம் சிக்கிய பாம்பை, வழக்குரைஞா் ஒருவா் மீட்டாா்.

கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் ரயில் நிலையம் பின்புறம் சாரைப்பாம்பை கீரி ஒன்று துரத்தி வந்தது. இதைத்தொடா்ந்து பாம்பும், கீரியும் சண்டையிட்டன. அங்கிருந்தவா்கள் கீரியை துரத்திவிட்டு பாம்பை மீட்க முயன்றனா். ஆனால், பாம்பு அங்கிருந்த வலையில் மாட்டிக்கொண்டதால் வெளிவே வர முடியாவில்லை.

Story image

இது குறித்து சிங்காநல்லூரைச் சோ்ந்த பாம்புபிடி வீரரும், வழக்குரைஞருமான சித்திரன் (25) என்பவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த அவா், பாம்பை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா்.

பாம்புக்கு சிகிச்சை அளித்த வனத் துறையினா், அவற்றை வனப் பகுதியில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.