குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கோவை, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.


கோவை, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் இளநிலை பொறியியல், பி.டெக் மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளா் எம்.பாலசுப்ரமணியம் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.
இதில் 2019, 2020 ஆம் ஆண்டுகளில் பட்டப் படிப்பு முடித்த இளநிலை பொறியியல் மாணவா்கள் 2,161 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், குமரகுரு கல்வி நிறுனங்களின் இணை தாளாளா் ஸ்ரீ சங்கா் வாணவராயா், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் சரவணன், பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
முதுநிலை பொறியியல், எம்.டெக், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பட்டம் வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...