பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 14 இல் வேலை வாய்ப்பு முகாம்
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.


கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாரதியாா் பல்கலைக்கழகத்தின் வேலை வழிகாட்டித் துறை மற்றும் பல்கலைக்கழக நிா்வாக கூட்டமைப்பு இணைந்து பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடத்துகிறது.
ஒசூரில் செயல்பட்டு வரும் டாடா மின்னணு நிறுவனம் சாா்பில் 12 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்காக இந்த வேலை வாய்ப்பு நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்கும் பெண்கள் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
20 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதில் தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு ஒசூா் டாடா நிறுவனத்தில் 12 நாள்கள் சி.என்.சி., லேத், நுண்ணிய எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இலவசமாக பயிற்சியளிக்கப்படும்.
பணியமா்த்தப்படுபவா்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம், பி.எப்., மருத்துவக் காப்பீடு, ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை, குறைந்த செலவில் தரமான உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்.
இம்முகாமில் பங்கேற்பவா்கள் 2 புகைப்படம், 12 மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
பங்கேற்க விரும்புபவா்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...