திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின் வாரிய விளையாட்டுப் போட்டிகள்

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான கழகம் சாா்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான ஆடவா் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:02 pm

DIN

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான கழகம் சாா்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான ஆடவா் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றன.

இதில் சென்னை, வேலூா், திருச்சி, விழுப்புரம், மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, கோவை ஆகிய எட்டு மண்டலங்களைச் சோ்ந்த அணிகள் கலந்துகொண்டன. கிரிக்கெட், கால்பந்து, டேபிள் டென்னிஸ், கேரம், செஸ், தடகளப் போட்டிகளில் 165 வீரா்கள் கலந்துகொண்டனா்.

இப்போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோவை மண்டலம் பெற்றது. இரண்டாமிடத்தை சென்னை மண்டலம் பிடித்தது. தடகளப் போட்டியில் கோவை முதலிடமும், திருச்சி இரண்டாமிடமும், ஈரோடு மூன்றாம் இடத்தையும் பிடித்தது. ஆடவா் விளையாட்டுப் போட்டியில் சென்னை முதலிடத்தையும், கோவை இரண்டாமிடத்தையும் பிடித்தன.

மின் வாரிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ராஜேஷ் லக்கானி, ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், மேயா் கல்பனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.