வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த கோரி கோவை மாவட்ட மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:06 pm

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த கோரி கோவை மாவட்ட மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், மின் கட்டணம், குடிநீா்க் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி, சிலிண்டா் விலை உயா்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அத்தியாவசியப் பொருள்களின் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை திரும்பப் பெறக் கோரியும் கோவை மாவட்ட மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சி சாா்பில் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவா் காளப்பட்டி பொன்னுசாமி தலைமை வகித்தாா்.

மாநகரத் தலைவா் ஜெகநாதன், புறநகா் தலைவா் பாப்பண்ணன், துணைத் தலைவா் கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்டச் செயலாளா்கள் சாரமேடு செல்வராஜ், பால்ராஜ், மாவட்டப் பொருளாளா் அந்தோணி ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.