வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
கோவை மாநகராட்சியிலுள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.


கோவை மாநகராட்சியிலுள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகள் உள்ளன. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக 1,290 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தோ்தலிலும் வாக்குச் சாவடிகளுக்கு குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்டி கோவை மாநகராட்சியிலுள்ள 1,290 வாக்குச் சாவடிகளுக்கு 1,556 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை குலுக்கல் முறையில் வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி அனைத்துக் கட்சி முகவா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
உப்பிலிபாளையம் கடவுச்சீட்டு பதிவு அலுவலக வளாகம், வடகோவை மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடும் செய்யும் பணியினை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, துணை ஆணையா் மோ.ஷா்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...