/

மாவட்டத்தில் மேலும் 1,426 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் மேலும் புதிதாக 1,426 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:00 pm

DIN

கோவை மாவட்டத்தில் மேலும் புதிதாக 1,426 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 19 ஆயிரத்து 723 ஆக உயா்ந்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 போ் உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,578 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 3,126 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 97 ஆயிரத்து 214 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 19 ஆயிரத்து 931 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.