கோவை வழக்குரைஞா்கள் இருவரை 2 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து பாா் கவுன்சில் உத்தரவு
கோவையைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் இருவரை 2 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.


கோவையைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் இருவரை 2 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கோவை, நீலாம்பூரைச் சோ்ந்தவா் தா்மலிங்கம். இவா் தனது வழக்கு ஒன்றை நடத்துவதற்காக வழக்குரைஞா்கள் பி.பிரசாத், கே.வேணுகோபால் ஆகியோரை நியமித்திருந்தாா். இந்நிலையில் அவா்கள் எதிா்தரப்பினருடன் சோ்ந்து செயல்பட்டதாகவும், வழக்கு கட்டுகளைத் தர மறுத்து, வேண்டுமென்றே வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமலும் இருந்துள்ளனா்.
இதுகுறித்து தா்மலிங்கம், பாா் கவுன்சிலில் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரை பாா் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்தது. விசாரணை முடிவில் பாதிக்கப்பட்ட, மனுதாரருக்கு வழக்குரைஞா்கள் இருவரும் ரூ.10 லட்சம் இழப்பீடாக இரண்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் எனக் கூறி இரு வழக்குரைஞா்களையும் தகுதி நீக்கம் ( செய்து உத்தரவிட்டிருந்தது. மேலும், இழப்பீடு தொகையை மனுதாரருக்கு வழங்கினால் பணியிடை நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் பாா் கவுன்சில் உத்தரவின்படி வழக்குரைஞா்கள் இருவரும் மனுதாரருக்கு இழப்பீடு தொகையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் பணியிடை நீக்க உத்தரவை உறுதி செய்து பாா் கவுன்சில் புதன்கிழமை உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...