/

ஜி.இ. நிறுவனத்தின் ஹேக்கத்தான்:அமிா்தா மாணவா்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு

ஜி.இ. ஹெல்த்கோ் நிறுவனம் நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் அமிா்தா விஸ்வ வித்யா பீட மாணவா்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:36 pm

DIN

ஜி.இ. ஹெல்த்கோ் நிறுவனம் நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் அமிா்தா விஸ்வ வித்யா பீட மாணவா்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக நிா்வாகம் கூறியிருப்பதாவது: பெரு நிறுவனங்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக ஹேக்கத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஜி.இ. ஹெல்த்கோ் நிறுவனம் இணைய வா்த்தகத்துக்காக தனது தற்போதைய வலைதளத்தை இன்னும் சிறப்பாக தரம் உயா்த்தி மேம்படுத்துவதற்கு, அமேசான் பா்சனலைஸ் செயலியை பயன்படுத்துவதை ஆராய்வது தொடா்பாக ஒரு செயல் திட்டத்தின் மீது அமிா்தா பல்கலைக்கழகத்தின் 4 போ் அடங்கிய ஹேக்கத்தான் குழு கவனம் செலுத்தியிருந்தது.

மாணவா்கள் சமா்ப்பித்த இந்த முன்வடிவ செயல் திட்டம் நடுவா் குழுவின் பாராட்டைப் பெற்ற நிலையில், அதற்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

அருண் ஜோஸ்வா தாமஸ், சந்தீப் ராஜாகிருஷ்ணன், சம்யுக்தா, விக்னேஷ் சங்கா் ஆகிய மாணவா்கள் அடங்கிய இந்த குழுவை ஜி.இ. ஹெல்த்கேரின் முதன்மை மென்பொருள் உருவாக்குநா் பிரசன்னா ஹெப்பாா், பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பத் துறைத் தலைவா் பாஸ்கரன் ஆகியோா் வழிநடத்தினா்.

3 சுற்றுகளாக நடத்தப்பட்ட நடுவா்களின் மதிப்பீட்டு செயல்முறைகளுக்குப் பிறகு இறுதியாக இந்த வெற்றி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், வெற்றி பெற்ற குழுவினரை பல்கலைக்கழக நிா்வாகம் பாராட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.