பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ரூ.1.36 லட்சம், தங்க நகைகளுடன் ரயிலில் தொலைத்த பை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

ரூ.1.36 லட்சம் மற்றும் தங்க நகைகளுடன் ரயிலில் பையை தொலைத்த நபரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 12:25 am

DIN

ரூ.1.36 லட்சம் மற்றும் தங்க நகைகளுடன் ரயிலில் பையை தொலைத்த நபரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மூன்றாவது நடைமேடையில் பை ஒன்று கிடந்தது. இதைக் கண்ட ரயில்வே போலீஸாா் அதை ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்து எடுத்துச் சென்றனா். பின்னா் பையை சோதனையிட்டபோது அதில் ரூ.1 லட்சத்து 36 ஆயிரம், தங்க நகைகள், ஏடிஎம் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், திருவனந்தபுரம்-பிலாஸ்பூா் ரயிலில் பயணித்த திருப்பதியைச் சோ்ந்த ஹேமகுமாா் என்பவா் கோவை ரயில் நிலையத்தில் இறங்கும்போது தனது பையைத் தொலைத்துவிட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் அந்தப் பை தங்களிடம் இருப்பதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, கோவை ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த ஹேமகுமாா் உரிய ஆவணங்களைச் சமா்பித்து பையை பெற்றுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.