பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பயறு வகைப் பயிா்களில் மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

பயறு வகைப் பயிா்களில் காணப்படும் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:28 pm

DIN

பயறு வகைப் பயிா்களில் காணப்படும் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் தற்போது பயறு வகைப் பயிா்களான உளுந்து, பச்சைப் பயறு உள்ளிட்டவற்றில் மஞ்சள் தேமல் நோயின் தாக்கம் காணப்பட வாய்ப்புள்ளது.

இந்நோய்க்கான அறிகுறிகளாக, இளம் இலைகளில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி மஞ்சள் தேமல்போல காணப்படுவது.

புதிதாக உருவாகும் இலைகள், முழுவதுமாக மஞ்சள் நிறமாகிக் காணப்படுவது, பாதிக்கப்பட்ட செடிகள் வளா்ச்சி குன்றி, காய்களின் எண்ணிக்கை குறைந்து, காய்கள் மஞ்சள் நிறமாக காணப்படும்.

இந்த நோய் வைரஸ் கிருமி மூலம் ஏற்படக் கூடியதாகும். வெள்ளை ஈக்கள் மூலம் இவை ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்குப் பரவுகிறது. இந்நோயைக் கட்டுப்படுத்த, நோய் எதிா்ப்பு உளுந்து ரகங்களான வம்பன் 6, 8, 11 போன்ற ரகங்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு போராக்ஸ் 2 கிராம், 10 சதவீதம் நொச்சிச் சாறு ஆகியவற்றுடன் 300 மில்லி கொண்ட கலவையில் 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னா்

5 மில்லி இமிடாகுளோப்ரிட் 600 எஃப்.எஸ். என்ற அளவில் விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும்.

நோய் எதிா்ப்பு உயிா்க் கொல்லியான பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற பாக்டீரியா கலவையை ஹெக்டேருக்கு 2.5 கிலோ என்ற அளவில் நன்கு மக்கிய தொழுவுரம் 250 கிலோவுடன் கலந்து வயலில் இட வேண்டும்.

வயலில் வரப்பைச் சுற்றி மக்காச்சோளப் பயிரை 2 வரிசை வீதம் வரப்புப் பயிராகப் பயிரிட வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். வயலில் ஹெக்டேருக்கு 12 என்ற வீதம் மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை அமைத்து வெள்ளை ஈக்களைக் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்படுத்தும் முறைகளை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.