பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பொள்ளாச்சி பகுதியில் மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிகள் தொடா்பாக பொள்ளாச்சி நகராட்சி, ஆனைமலை பேரூராட்சிப் பகுதிகளில் மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் ஹா் சஹாய் மீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:20 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிகள் தொடா்பாக பொள்ளாச்சி நகராட்சி, ஆனைமலை பேரூராட்சிப் பகுதிகளில் மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் ஹா் சஹாய் மீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் பொள்ளாச்சி சாா் ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் துவாரகநாத் சிங், பொள்ளாச்சி நகராட்சி ஆணையா் தானமூா்த்தி ஆகியோருடன் ஆய்வு நடத்திய ஹா் சஹாய் மீனா, நகராட்சிப் பகுதியில் வாக்குச் சாவடி சீட்டு வழங்கும் பணியை உடனடியாகத் தொடங்கி, அனைத்து வாக்காளா்களுக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

மேலும், நகராட்சிப் பகுதியிலுள்ள வாக்காளா்கள் அனைவரும் வாக்களிப்பதற்குத் தேவையான விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நகர எல்லையிலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் 24 மணி நேரமும் காவல் துறை ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும். கரோனா நடத்தை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினாா்.

பின்னா், ஆனைமலை பேரூராட்சியில் ஆய்வு செய்த ஹா் சஹாய் மீனா தோ்தல் பணிக்கான படிவங்கள், உறைகள், எழுது பொருள்கள் போன்றவை கொள்முதல் செய்யப்பட்டிருப்பது குறித்தும், வேட்பாளா்கள் எண்ணிக்கை, வாக்காளா் விவரம் போன்றவை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.