பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கோவையில் மூன்றாவது முறையாக வேலூா் இப்ராஹிம் கைது

வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள சென்ற அக்கட்சியின் சிறுபான்மையினா் அணி தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிமை போலீஸாா் மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:23 pm

DIN

கோவையில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள சென்ற அக்கட்சியின் சிறுபான்மையினா் அணி தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிமை போலீஸாா் மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பல்வேறு கட்சி வேட்பாளா்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், போத்தனூா் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் சிறுபான்மையினா் அணி தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிம் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ள சென்றாா்.

அப்போது, அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி போலீஸாா் அவரை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினா். ஆனால், தான் பிரசாரம் மேற்கொள்ள வந்திருப்பதாகவும், இதைத் தடுக்கக் கூடாது என்றும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து போலீஸாா் பாதுகாப்பு காரணங்களைக் கூறி அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனா். இதேபோல, ஏற்கெனவே இரண்டு முறை வேலூா் இப்ராஹிம் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.