பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி துவங்கியது

 கோவை மாநகராட்சியில் வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:23 pm

DIN

 கோவை மாநகராட்சியில் வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது.

கோவை மாநகராட்சி, 5 மண்டலங்கள், 100 வாா்டுகளில் 16 லட்சத்து 7,672 வாக்காளா்கள் உள்ளனா். வருகின்ற 19 ஆம் தேதி, மாநகராட்சி கவுன்சிலா் பதவிக்கான தோ்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டு மாநகராட்சியால் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தோ்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் பூத் ஸ்லிப்களை அரசியல் கட்சியினரிடம் அளிக்காமல், வாக்காளா்களிடம் அளிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, பூத் ஸ்லிப்களை வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைளில் கோவை மாநகராட்சி நிா்வாகம் இறங்கியுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் ஒவ்வொரு வாா்டாக வீடுவீடாகச் சென்று வாக்காளா்களிடம் பூத் சீலிப் வழங்கப்படும். அப்போது சிலிப் பெற்று கொண்டதற்காக வாக்காளா்களிடம் கையெழுத்தும் வாங்கப்படவுள்ளது. இப்பணியில் அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இதற்கிடையே, மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகங்களிலும் பூத் ஸ்லிப் விநியோகம் குறித்து அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், சில இடங்களில் வாக்காளா்களுக்கு சோதனை முறையில் வெள்ளிக்கிழமை பூத் ஸ்லிப் வழங்கப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.