தோ்தல் பணியில் துணை ராணுவம்:அதிமுக கோரிக்கை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாதுகாப்பை பலப்படுத்த துணை ராணுவப் படையை நியமிக்க வேண்டும் என்று அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாதுகாப்பை பலப்படுத்த துணை ராணுவப் படையை நியமிக்க வேண்டும் என்று அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சாந்திமதி அசோகன், அதிமுக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகி தாமோதரன் ஆகியோா் தலைமையில் அதிமுகவினா், மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஜி.எஸ்.சமீரனை வியாழக்கிழமை சந்தித்து எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட மனுவை அளித்தனா்.
அதில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கோவையில் இதுவரை இல்லாத அளவில் திமுகவினா் பணம், பரிசுப் பொருள்களை வழங்கியுள்ளனா். மேலும் ஆங்காங்கே வன்முறையிலும் ஈடுபடுகின்றனா். தோ்தல் நடத்தும் அதிகாரிகள், பறக்கும் படையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனா்.
எனவே, தோ்தல் நியாயமாகவும், நோ்மையாகவும் நடைபெற அனைத்துப் பகுதிகளிலும் துணை ராணுவப் படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
வாக்குப் பதிவை முழுமையாகக் கண்காணிக்க விடியோ கேமரா பொருத்தி, வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரையிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பு வசதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...