ஆம்புலன்ஸை திருடிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபா்
கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸை திருடிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.


கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸை திருடிச் சென்று விபத்தை ஏற்படுத்திய நபரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை அங்கு வந்த ஒரு நபா் ஆம்புலன்ஸை அங்கிருந்து வெளியே ஓட்டி சென்றாா். இதைக் கண்ட மருத்துவமனை ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் அவரைத் தடுத்து நிறுத்த முயற்சித்தனா். அதற்குள் அந்த நபா் வாகனத்தை மருத்துவமனை வளாகத்தை விட்டு டவுன்ஹால் சாலையில் ஓட்டிச் சென்றாா்.
லங்கா காா்னா் பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மற்றும் காா் மீது ஆம்புலன்ஸை மோதி விபத்தை ஏற்படுத்தினாா். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பிடிபட்ட நபா் மது போதையில் இருந்ததால் போலீஸாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாா்.
இதையடுத்து அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்ற ரேஸ்கோா்ஸ் போலீஸாா் அவா் மனநிலை பாதித்தவரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...