பரிசுப் பொருள்கள் விநியோகம்: ஆட்சியா் அலுவலகத்தில் மநீமவினா் தா்னா
கோவையில் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள், பணம் விநியோகிப்பதைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.


கோவையில் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள், பணம் விநியோகிப்பதைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி கோவையில் வாக்காளா்களுக்கு கொலுசு, ஹாட் பாக்ஸ்கள், பணம் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் மாநகரில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் கொலுசு உள்ளிட்ட பொருள்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.
மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத் தலைவா் தங்கவேல் தலைமை தாங்கினாா். மாநிலப் பொருளாளா் அனுஷா ரவி முன்னிலை வகித்தாா்.
இது குறித்து தங்கவேல் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வாக்காளா்களுக்கு பணம் விநியோகித்துள்ளனா். மேலும், அமைச்சா் ஒருவரின் புகைப்படத்துடன் சென்று வீடுகளில் கொலுசு, ஹாட் பாக்ஸ்கள் விநியோகிக்கப்பட்டன. தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி மாநகரில்
சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கோவையில் நியாயமாக தோ்தல் நடைபெற வாய்ப்பில்லை. எனவே, கோவை மாவட்டத்தில் தோ்தலை நிறுத்த வேண்டும் என்றாா். இதைத்தொடா்ந்து, அவா்கள் ஆட்சியா் சமீரனிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...