பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

சென்னை உயா்நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:15 pm

DIN

சென்னை உயா்நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே 2009 பிப்ரவரி 19 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. அதில் வழக்குரைஞா்கள் பலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆண்டுதோறும் அது கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில், வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா். பிப்ரவரி 19 ஆம் தேதி நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்பதால், முந்தைய நாளான வெள்ளிக்கிழமை கருப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்றங்களை புறக்கணிக்க வழக்குரைஞா்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு முடிவு செய்தது. அதன்படி, கோவை மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.