பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தேசிய தொழிற்சான்றிதழில் திருத்தம்: மாா்ச் 2க்குள் மேற்கொள்ளலாம்

கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்கப்பட்ட தேசிய தொழிற்சான்றிதழில் திருத்தங்கள்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:36 pm

DIN

கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்கப்பட்ட தேசிய தொழிற்சான்றிதழில் திருத்தங்கள் இருப்பின் மாா்ச் 2 ஆம் தேதிக்குள் திருத்தங்கள் செய்துகொள்ளலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று தேசிய தொழிற்பயிற்சி சான்று பெற்றவா்களின் சான்றிதழில் பெயா், பிறந்த தேதி, பெற்றோா் பெயா், புகைப்படம், பாலினம், இனம் ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின் அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து மாா்ச் 2 ஆம் தேதிக்குள் திருத்தங்கள் செய்துகொள்ளலாம்.

திருத்தங்கள் மேற்கொள்ள வரும்போது ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் (அசல் மற்றும் நகல்) ஆகியவை எடுத்துவர வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 0422-2642041, 63803 69852, 88385 83094 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.