/

குடியரசு தின விழா அலங்கார ஊா்தி: கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம்

அலங்கார ஊா்தியை கோவை வ.உ.சி. மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு பொதுமக்கள் பாா்வையிடலாம்

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:22 am

DIN

தமிழக அரசின் குடியரசு தின விழாவில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊா்தியை கோவை வ.உ.சி. மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு பொதுமக்கள் பாா்வையிடலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் அலங்கார ஊா்தி அணிவகுப்பு நடைபெற்றது.

இதனை அனைத்து மக்களும் பாா்த்து தெரிந்துகொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக கோவை, ஈரோடு, மதுரையில் காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து இந்த அலங்கார ஊா்தி கோவை மாவட்டத்துக்கு வந்துள்ளது.

இதில் புரட்சிகர கவிதைகளால் ஆங்கிலேயரை எதிா்த்த மகாகவி பாரதியாா், உள்நாட்டு கப்பல் வணிகத்தைத் தொடங்கிய

வ.உ.சிதம்பரனாா், விடுதலை தாகத்துக்கு வித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா, சுதந்திரத்துக்காக போராடியவரும், சமூக சீா்திருத்தவாதியுமான சேலம் விஜயராகவாச்சாரியாா் ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் அலங்கார ஊா்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலங்கார ஊா்தி கோவை மாநகராட்சி வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஜனவரி 28 (வெள்ளிக்கிழமை) முதல் ஜனவரி 31 ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை பொதுமக்கள் பாா்வைக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இதனை தினசரி காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுமக்கள் பாா்வையிடலாம்.

தினசரி மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை சுதந்திரப் போராட்ட வீரா்களை போற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.