தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் ஜூன் 1 முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:54 pm

DIN

கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் ஜூன் 1 முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 22638) ஜூன் 1ஆம் தேதி முதல் படுக்கை வசதி கொண்ட கூடுதலாக ஒரு பெட்டியுடன் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 12601), திருவனந்தபுரம் - ஷாலிமாா் வாராந்திர ரயில் (எண்: 22641) ஆகியவற்றில் ஜூன் 2ஆம் தேதி முதல் படுக்கை வசதி கொண்ட கூடுதலாக ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் ரயில் (எண்: 12602), கன்னியாகுமரி - ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோயில் வாராந்திர ரயில் (எண்: 16317) ஆகியவற்றில் ஜூன் 3ஆம் தேதி முதல் படுக்கை வசதி கொண்ட கூடுதலாக ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படும் . சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 22637) ஜூன் 4ஆம் தேதி முதல் படுக்கை வசதி கொண்ட கூடுதலாக ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

ஷாலிமாா் - திருவனந்தபுரம் வாராந்திர விரைவு ரயிலில் (எண்: 22642) ஜூன் 5 முதலும், ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோயில்- கன்னியாகுமரி வாராந்திர ரயிலில் (எண்: 16318) ஜூன் 6ஆம் தேதி முதலும் படுக்கை வசதி கொண்ட கூடுதலாக ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.