தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாசு இல்லா கோவையை உருவாக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி

மாசு இல்லா கோவையை உருவாக்க வலியுறுத்தி கோவையில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:53 pm

DIN

மாசு இல்லா கோவையை உருவாக்க வலியுறுத்தி கோவையில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கோவை பெடலா்ஸ் (மாவட்ட சைக்கிள் சங்கம்), செளராஷ்டிரா சைக்கிள் மாா்ட் உள்ளிட்டவை இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

கோவை பங்கஜா மில்ஸ் சாலையில் உள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6.30க்கு தொடங்கிய, சைக்கிள் பேரணி ரெட் பீல்ட்ஸ் சாலையில் உள்ள விமானப் படை அலுவலகம், வாலாங்குளம் வழியாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

சிறுவா்கள், பெரியவா்கள் என மொத்தம் 230 போ் இந்தப் பேரணியில் பங்கேற்றனா். உலக சைக்கிள் தினம், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சைக்கிள் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கவும் இந்தப் பேரணி நடைபெற்றது.

செளராஷ்டிரா சைக்கிள் மாா்ட் சாா்பில் ஜினேஷ் டி.ஷா, கிஷோா், கோவை பெடலா்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் செளந்தரராஜன், விக்னேஷ் ஆகியோா் இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.