தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவை டவுன்ஹால், ராஜவீதி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று மாநகராட்சி ஆணையா் பிரதாப் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:55 pm

DIN

கோவை டவுன்ஹால், ராஜவீதி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று மாநகராட்சி ஆணையா் பிரதாப் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மத்திய மண்டலம் 81, 82 ஆவது வாா்டுகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணிகளை ஆணையா் பாா்வையிட்டாா்.

அதனைத் தொடா்ந்து, டவுன்ஹால் பகுதியில் நடைப்பாதையில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டியிடம் சென்று நலம் விசாரித்தாா். முதியோா் இல்லத்தில் சோ்க்க ஏற்பாடு செய்வதாக, அந்த மூதாட்டியிடம் தெரிவித்தாா்.

தொடா்ந்து, 81 ஆவது வாா்டு சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடுகளை பாா்வையிட்டாா்.

பின்னா், டவுன்ஹால், ராஜவீதி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வியாபாரிகள் மஞ்சப் பைகளை உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.