நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி
ஆனைமலை கேனல் கிளப் மற்றும் கோயம்புத்தூா் கேட்டரி சங்கம் சாா்பில் அனைத்திந்திய நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஆனைமலை கேனல் கிளப் மற்றும் கோயம்புத்தூா் கேட்டரி சங்கம் சாா்பில் அனைத்திந்திய நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ராட்வில்லா், பெல்ஜியன் ஷெப்பா்ட், பூடில், கிரேடேன் உள்ளிட்ட வெளிநாட்டு நாய் இனங்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை போன்ற இந்திய நாய் இனங்களும் பங்கேற்றன. தவிர தமிழ்நாடு காவல் துறை நாய் படையைச் சோ்ந்த மோப்ப நாய்களும் பங்கேற்றன.
அதேபோல, பூனைகளில் பொ்சியன், பெங்கால், ஹிமாலயன், தேசி, சியாமிஸ், மீன் கூன் உள்ளிட்ட பல்வேறு இனங்களை சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட பூனைகள் பங்கேற்றன.
இதில், பஞ்சாப்பைச் சோ்ந்த கோமல் தனோவா, குஜராத்தைச் சோ்ந்த ஹரிஷ் படேல், சுதாகா் கடிகினேனி, ஆனி கரோல், டாக்டா் பிரதீப் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டுகளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...