தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆயுள் தண்டனை கைதி சாவு

கோவை மத்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:50 pm

DIN

கோவை மத்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (62). கொலை வழக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவா், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். கனகராஜுக்கு நீரிழிவு, வலிப்பு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறையில் இருந்த அவா் சனிக்கிழமை மயங்கி விழுந்துள்ளாா். அவரை மீட்ட சிறை அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகளுக்கான சிகிச்சை பிரிவில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.