தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு மாரத்தான்

 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மண் வளம் காப்போம் இயக்கம் சாா்பில் கோவையில் விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:53 pm

DIN

 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மண் வளம் காப்போம் இயக்கம் சாா்பில் கோவையில் விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈஷா அறக்கட்டளையின் மண் வளம் காப்போம் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த மாரத்தானை ஐ.என்.எஸ். அக்ரானி கமான்டிங் ஆஃபிசா் காமோடா் அசோக் ராய் தொடங்கிவைத்தாா்.

அவிநாசி சாலை ஆா்.கே. ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலையத்தில் தொடங்கிய விழிப்புணா்வு மாரத்தான் 5 கிலோ மீட்டா் பயணத்துக்குப் பின் மீண்டும் அதே இடத்தில் முடிவடைந்தது.

மாரத்தானில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு மண் வளம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பொள்ளாச்சியில்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி பொள்ளாச்சியை அடுத்த மணக்கடவு வானவராயா் வேளாண்மை கல்வி நிறுவனம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் இருந்து புளியம்பட்டி வரை நான்கு கிலோ மட்டா் தொலைவுக்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் சியாமளா நவநீதகிருஷ்ணன் போட்டியை துவக்கிவைத்தாா்.

இதில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருணாச்சலம், மகாலிங்கபுரம் துணைக் காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம், வேளாண் கல்லூரி முதல்வா் குமாரவடிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.