இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

திருச்சி: முக்கொம்பு புதிய கதவணை; ஜூன் 26-ல் முதல்வர் திறப்பு

வருகிற ஜூன் 26ம் தேதி தமிழக முதல்வர் திருச்சி வருகை தந்து 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை திறந்து வைக்கிறார்.

Published On :

திருச்சி: வருகிற ஜூன் 26ம் தேதி தமிழக முதல்வர் திருச்சி வருகை தந்து 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை திறந்து வைக்கிறார்.

முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியது:

Story image

திருச்சியில் ரூ.387.60 கோடி மதிப்பீட்டில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வருகிற ஜூன் 26ம் தேதி தமிழக முதல்வர் திருச்சி வருகை தந்து 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை திறந்து வைக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் 9 மதகுகள் இடிந்து சேதம் ஆனாது. இந்நிலையில் இதற்கு மாற்றாக புதிய பாலம் மற்றும் கதவணை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த புதிய பாலம், பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக திட்டமிடப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதி மாயனூர் பாலத்தை கட்டியபோது இருவழிப் பாதையாக இருக்கும் வகையில் கட்டினார்.

Story image

ஆனால் இது குறுகளாக ஒரு வழிப்பாதையாக தான் உள்ளது. அதே நேரம், இந்த பாலத்தில் மேலும் சில புதிய விஷயங்களை கொண்டுவர உள்ளோம். அதை முதல்வர் தெரிவிப்பார்.

திருச்சியில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்கனவே ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது 130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் எக்பிரஸ் எலிவேட்டர்-வே உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் துவக்கப்படும்.

மேகதாது புதிய அணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு: நான் திருச்சி அமைச்சர் என்னிடம் திருச்சி கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.