‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மனநல மீளாய்வு மன்றத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டடம்ஆட்சியா் திறந்துவைத்தாா்

 கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனநல மீளாய்வு மன்ற அலுவலகக் கட்டடத்தை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:44 pm

DIN

 கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனநல மீளாய்வு மன்ற அலுவலகக் கட்டடத்தை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

மனநலம் பாதிக்கப்பட்டவா்களின் நலனைப் பாதுகாப்பதற்காக தமிழகத்தில் மனநல மீளாய்வு மன்றங்கள் அமைக்க கடந்த ஆண்டு அரசு உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல மீளாய்வு மன்றம் அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஜே.வி.ராஜ் நியமிக்கப்பட்டாா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த மனநள மீளாய்வு மன்றத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் மனநல மீளாய்வு மன்றத்தின் புதிய கட்டடத்தை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து மனநல மீளாய்வு மன்றத்தில் புகாா் அளிக்கும்பட்சத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு தீா்வு காணப்படும். மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மனநலக் காப்பகங்கள், மறுவாழ்வு மையங்களின் செயல்பாடுகள் இம்மன்றம் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மனநல மீளாய்வு மன்றத் தலைவா் ஜே.வி.ராஜ், கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ்.ரவி, மேற்கு மண்டல காவல் துறை துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி, திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் பி.ராஜேந்திரன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, துணை முதல்வா் பி.சுஜாதா, மாவட்ட மனநல மருத்துவா் கே.எம்.பூா்ணஜித், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜி.வசந்த் ராம்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.