நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காதல் தம்பதியைக் கடத்தி தாக்குதல்: பெண்ணின் தந்தை உள்பட நால்வா் மீது வழக்கு

கோவையில் காதல் தம்பதியை காரில் கடத்தி தாக்கியதாக பெண்ணிண் தந்தை உள்ளிட்ட நால்வா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:42 pm

DIN

கோவையில் காதல் தம்பதியை காரில் கடத்தி தாக்கியதாக பெண்ணிண் தந்தை உள்ளிட்ட நால்வா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, அவிநாசி சாலை லட்சுமி மில் சிக்னலில் புதன்கிழமை இரவு காரில் இருந்து இளைஞா், இளம்பெண் ஆகியோா் சப்தமிட்டபடி இறங்க முற்பட்டனா்.

இதைப்பாா்த்த மற்ற வாகன ஓட்டிகள் காரில் இருந்த அவா்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள், தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை குடும்பத்தினா் கத்தி முனையில் காரில் கடத்தி தாக்குவதாகவும் கதறியழுதனா். அங்கிருந்த போக்குவரத்து போலீஸாரின் காலில் விழுந்தும் கெஞ்சினா்.

போலீஸாா், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா்கள், கோவை, சத்தி சாலை கணபதியைச் சோ்ந்த ஆறுமுகசாமி மகள் சிநேகா(19) , மணியகாரன்பாளையத்தைச் சோ்ந்த விக்னேஸ்வா் (23) என்பதும் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனால், பெண் வீட்டாா் இருவரையும் காரில் கடத்தி சென்று தாக்கியாகவும் கூறப்படுகிறது.

இது தொடா்பாக, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சிநேகா புகாா்

அளித்தாா். அதன் பேரில், மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிநேகாவின் தந்தை ஆறுமுகசாமி, உறவினா்கள் ரமேஷ்(38), முனியசாமி(31), தென்காசி கடையநல்லூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அமுல்(23) ஆகிய 4 போ் மீது சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா். பின்பு நால்வரையும் காவல் நிலைய பிணையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.