கோவையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் கைது

மதமாற்ற முயற்சியை எதிர்த்தற்காக, கொலை செய்யத் திட்டமிட்ட 5 பேர் கொண்ட கும்பலை உளவுத்துறையின் ரகசியத் தகவலின் பேரில் தமிழக கோவை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கோவை: மதமாற்ற முயற்சியை எதிர்த்தற்காக, கொலை செய்யத் திட்டமிட்ட 5 பேர் கொண்ட கும்பலை உளவுத்துறையின் ரகசியத் தகவலின் பேரில் தமிழக கோவை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த குமரேசன் மகன் அருண்குமார் (28), ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். இவர் திருவாரூரைச் சேர்ந்த சஹானா ஹாஷ்மி முகமது என்ற முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அருண்குமார் பெற்றோர் ஆதரவுடன் இந்து முறைப்படி கோவையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, சஹானா ஹாஷ்மி தாயார் நூர் நிஷா அருண்குமாரை அழைத்து, இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு கூறினார். இதற்கு அருணின் தந்தை குமரேசன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நிஷா, ஃபக்ருதீனை என்பவரை அணுகி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இம்ரான்கான், சதாம் உசேன், எம்.முகமது அலி ஜின்னா, டி.அஜாய் ஆகிய நால்வருடன் சேர்ந்து குமரேசனை கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த இரண்டு நாட்களாக கோவையில் அந்நியர்கள் நடமாட்டம் இருப்பதாக தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறை உள்ளூர் காவலர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, செல்வபுரம் காவல் துறையினர் விரைந்து வந்து 5 பேர் கொண்ட கும்பலை நேற்று இரவு கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com