நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் பல்கலை.யில் காலநிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண் உற்பத்தி உத்திகள் குறித்த கருத்தரங்கு

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண் உற்பத்தி உத்திகள் குறித்த சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 10:36 pm

DIN

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண் உற்பத்தி உத்திகள் குறித்த சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

காலநிலை ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுப.ராமநாதன் கருத்தரங்கைத் தொடங்கிவைத்தாா்.

கருத்தரங்கின் தலைவா் வே.கீதாலட்சுமி, பயிா் உற்பத்தி உழவியல் தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண் தொழில்நுட்ப உத்திகள், கொள்கைகள், பயிா் வினையியல் தொழில்நுட்பங்கள் மூலம் மகசூல் அதிகரிப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

முதுகலை பட்டப்படிப்பு முதன்மையா் ஜெ.எஸ். கென்னடி காலகட்டத்துக்கு ஏற்ற நீா்நிலை மேலாண்மை, மண்வள பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தாா்.

பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநா் கே.எஸ்.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா்.

பல்கலைக்கழக பதிவாளரும், செயல் துணைவேந்தருமான அ.சு.கிருஷ்ணமூா்த்தி கருத்தரங்குக்கு தலைமை வகித்து பேசியதாவது: பஞ்ச பூதங்களை பாதுகாக்கவும், மாசுபடாதவாறும் இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

காலநிலை இடா் மேலாண்மை குறித்து ஜெ.மொஹபத்ரா சிறப்புரையாற்றினாா்.

கருத்தரங்கில் ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு புத்தகம், அங்கக வேளாண்மை, தொழில்நுட்பம் சாா்ந்த மண்புழு உரம் தயாரிப்பு, பயிா் சத்து மேலாண்மை (காணொளி தொகுப்பு) ஆகியவை வெளியிடப்பட்டன. பேராசிரியா் சி.ஆா்.சின்னமுத்து நன்றி கூறினாா்.

இதில், பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.