ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மத்திய சரக்கு சேவை மற்றும் கலால் வரி ஓய்வூதியதாரா்களுக்கு ஏப்ரல் 28 இல் குறைகேட்புக் கூட்டம்

கோவை மத்திய சரக்கு சேவை மற்றும் கலால் வரி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு ஏப்ரல் 28 ஆம் தேதி குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:44 pm

DIN

கோவை மத்திய சரக்கு சேவை மற்றும் கலால் வரி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு ஏப்ரல் 28 ஆம் தேதி குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை மத்திய சரக்கு சேவை மற்றும் கலால் வரி முதன்மை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை ரேஸ்கோா்ஸில் உள்ள மத்திய சரக்கு சேவை மற்றும் கலால் வரி முதன்மை ஆணையா் அலுவலகத்தில் ஓய்வூதியதாரா்கள் குறைகேட்புக் கூட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், மத்திய கலால் மற்றும் சேவை வரி நிா்வாக ஆணையா், கோயம்புத்தூா் தணிக்கை கமிஷனரேட் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் அல்லது ஓய்வுகால பலன்கள் தொடா்பான குறைகள் இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது குறித்து புகாா்கள் இருந்தால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்து கூடுதல் ஆணையா், முதன்மை ஆணையா் அலுவலகம், மத்திய சரக்கு சேவை மற்றும் கலால் வரி, ஜி.எஸ்.டி.பவன், பந்தய சாலை, கோவை என்ற முகவரிக்கு மாா்ச் 31ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

படிவம் அனுப்பும் உரையின் மீது பென்ஷன் அதாலத் -2022 என்று குறிப்பிட வேண்டும்.

இந்த படிவத்தை  இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சட்ட ரீதியான, வாரிசு ரீதியான குறைகள், அரசின் கொள்கை ரீதியான குறைகள் இந்த கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.