ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகளுக்கு நீா் நிலைத்தன்மை விருது

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தைச் சோ்ந்த கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் விஞ்ஞானிகளான முனைவா்கள் கு.ஹரி, து.புத்திரபிரதாப், ப.முரளி, பா.சிங்காரவேலு,

News image
Updated On :24 மார்ச் 2022, 10:45 pm

DIN

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தைச் சோ்ந்த கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் விஞ்ஞானிகளான முனைவா்கள் கு.ஹரி, து.புத்திரபிரதாப், ப.முரளி, பா.சிங்காரவேலு,

அ .ரமேஷ்சுந்தா் மற்றும் பக்ஷிராம் ஆகியோருக்கு 2021ஆம் ஆண்டுக்கான நீா் நிலைத்தன்மை விருது அண்மையில் வழங்கப்பட்டது.

ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (பஉதஐ), சா்வதேச நீா் சங்கம் (ஐரஅ) மற்றும் ஐக்கிய நாடுகள் வளா்ச்சி திட்டம் (மசஈட) ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளா்ச்சி இலக்குகளை”அடையும் முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நீா் நிலைத்தன்மை விருதுகளை,

இந்த ஆண்டு முதல் வழங்குகின்றன.

இதில் ‘விவசாயத் துறையில் நீா் பயன்பாட்டுத் திறன்’ என்ற பிரிவில் கோவையைச் சோ்ந்த விஞ்ஞானிகளுக்கு , மண் ஈரப்பதங் காட்டி (நஞஐக ஙஞஐநபமதஉ ஐசஈஐஇஅபஞத) என்னும் கருவியினை உருவாக்கி நீா் வளங்களை சேமித்த ஆராயச்சிக்காக, முதலிடம் கிடைத்தது.

தில்லியில் உலக நீா் தினத்தன்று (மாா்ச் 22) நடைபெற்ற விழாவில், இவ்விருது வழங்கப்பட்டது.

மண் ஈரப்பதங் காட்டி கருவியினைப் பயன்படுத்தி கரும்பு விவசாயிகள் ஏறத்தாழ 15 விழுக்காடு வரை தண்ணீரை மிச்சப்படுத்த முடியும்.

விருது பெற்ற விஞ்ஞானிகளைப் பாராட்டிய கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநா் முனைவா் ஜி.ஹேம பிரபா கூறுகையில், உழவா் பங்கேற்பு தொழில்நுட்ப உருவாக்கம்”என்ற ஆராய்ச்சி முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இக்கருவியானது தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூா், ஈரோடு, கோவை மாவட்ட விவசாயிகளின் வயல்களில் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின்னரே வெளியிடப்பட்டது. இது குறித்த கூடுதல் விவரங்களை ட்ற்ற்ல்://ள்ன்ஞ்ஹழ்ஸ்ரீஹய்ங்.ண்ஸ்ரீஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ட்ற்ற்ல்://ஸ்ரீஹய்ங்ண்ய்ச்ா்.ண்ஸ்ரீஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளங்களில் காணலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.