25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கோவையில் இன்றும், நாளையும் 5 மையங்களில் டான்செட் நுழைவுத்தேர்வு

முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு கோவை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 5 மையங்களில் நடைபெறுகிறது.

Published On :1 பிப்ரவரி 2024, 2:45 pm IST

கோவை: முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு கோவை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 5 மையங்களில் நடைபெறுகிறது.

Story image

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.

Story image

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று டான்செட் நுழைவுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் 5 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, மருதமலை சாலையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் ,பீளமேடு பகுதியிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி, பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, பிஎஸ்ஜி தொழில்நுட்ப பயிற்சி நிலையம் உள்ளிட்ட 5 மையங்களில் நடைபெறும்.

Story image

தேர்வுகளில் எம்பிஏ பிரிவுக்காக 2921 பேர், எம்சிஏ பிரிவிற்காக 788 பேர், எம்.இ மற்றும் எம்.டெக் ஆகிய பிரிவிற்காக 693 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 396 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும் இன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை எம்சிஏ பிரிவுகளுக்கான தேர்வும், பிற்பகல் 2 30 மணி முதல் 4 30 மணி வரை எம்பிஏ பிரிவுகளுக்கான தேர்வும், நாளை காலை 10 மணி முதல் 12 மணிவரை எம்.இ மற்றும் எம்.டெக் பிரிவுகளுக்கான தேர்வும் நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.