ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலத்தை இடித்துக் கட்ட தேவையில்லை: ஐஐடி

ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலத்தை மீண்டும் இடித்துக் கட்ட வேண்டிய தேவை இல்லை என ஆய்வுக்கு பின் ஐஐடி குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலத்தை இடித்துக் கட்ட தேவையில்லை: ஐஐடி

கோவை: ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலத்தை மீண்டும் இடித்துக் கட்ட வேண்டிய தேவை இல்லை என ஆய்வுக்கு பின் ஐஐடி குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. கோவை ராமநாதபுரம் - சுங்கம் மேம்பால விபத்து குறித்து ஐஐடி வல்லுநர்கள் குழு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முனைவர் கீதா கிருஷ்ணன் தலைமையிலான குழு இருமுறை ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலத்தில் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் சுங்கம் மேம்பாலத்தில் வேகமாக வாகனங்களை இயக்கியதே விபத்துக்கு காரணம் என ஐஐடி வல்லுநர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் செல்லவும், வேகம் காட்டும் கருவி பொருத்தவும் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கோவை ராமநாதபுரம் - சுங்கம் இடையே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.253 கோடி மதிப்பில் 3.3 கிலோ மீட்டா் தூரத்துக்கு உயா்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைத்தாா். 

மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்து துவங்கப்பட்ட ஒருசில நாள்களிலேயே நடைபெற்ற விபத்துகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள், மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். 

இதனையடுத்து,  ராமநாதபுரம்-சுங்கம் மேம்பாலம் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 3 பேர் விபத்துக்குள்ளாகி பலியான விவகாரம் தொடர்பாக, ஆய்வுக்கு பின்  ஐஐடி குழு  அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com