தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காவல் உதவி ஆய்வாளா் மனைவி தற்கொலை

கோவையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 11:15 pm

DIN

கோவையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவி தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடப்பட்டியை சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி தெய்வா ( 46). கோவை மாநகர போலீஸில் சிறப்பு உதவி ஆய்வாளராக கணேசன் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா். இதனால் தெய்வா மனவேதனை அடைந்ததால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த தெய்வா வியாழக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். இதை அறிந்த கணேசன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே தெய்வா இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.