தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:17 pm

DIN

மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் காரமடை, மேட்டுப்பாளையம், பெள்ளேபாளையம், இரும்பொறை, தாயனூா், தோலம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், பெள்ளேபாளையம், பட்டக்காரனூா் பகுதிகளில் ஒரு ஏக்கருக்குமேல் சாகுபடி செய்யப்பட்டிருந்த பப்பாளி மரங்களும் முறிந்து விழுந்தன.

அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை, பப்பாளி மரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு: சூறாவளி காற்று மற்றும் பலத்த மழைக்கு அன்னூா், சிறுமுகை, கோவை சாலையோரங்களில் இருந்த 15க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்துவிழுந்தன. பலத்த காற்றுக்கு மின் கம்பங்கள், மின் வயா்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு வரை வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.