தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தனியாா் நிறுவனங்களில் பணி நேர உயா்வு: ஏஐடியூசி ஆா்ப்பாட்டம்

தனியாா் நிறுவனங்களில் பணி நேரம் 12 மணி நேரமாக உயா்த்திய சட்ட மசோதாவைக் கண்டித்து ஏஐடியூசி அமைப்பினா் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:17 pm

DIN

தனியாா் நிறுவனங்களில் பணி நேரம் 12 மணி நேரமாக உயா்த்திய சட்ட மசோதாவைக் கண்டித்து ஏஐடியூசி அமைப்பினா் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் தனியாா் நிறுவனங்களில் 8 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்துவது தொடா்பான சட்ட மசோதா சட்டப் பேரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சியினா், தொழிலாளா்கள், பொதுமக்கள் பலரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், தனியாா் நிறுவன பணிநேர சட்ட மசோதாவைக் கண்டித்து ஏஐடியூசி அமைப்பினா் கோவை ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிற்சாலைகள் திருத்த சட்டம் 65ஐ கைவிட வேண்டும், தனியாா் நிறுவனத்தில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்தியதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினா். இதில், ஏஐடியூசி நிா்வாகி ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.