பெரியகுளத்தில் இன்று நெகிழி விழிப்புணா்வு
உக்கடம் பெரியகுளத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல் 22) நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது


உக்கடம் பெரியகுளத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல் 22) நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பூமி தினத்தை முன்னிட்டு, கோவை மாநகராட்சி மற்றும் கட்டடக் கலைஞா்கள், தனியாா் அமைப்பு இணைந்து உக்கடம் பெரியகுளத்தில் நெகிழி( பிளாஸ்டிக்) நுகா்வின் தீமைகளை எடுத்துரைக்கும் விதமாகவும், மனித -இயற்கை இணைப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாகவும் நெகிழி விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உக்கடம் பெரியகுளத்தில் தனியாா் அமைப்பு சாா்பில் சேகரிக்கப்பட்ட நெகிழி பாட்டில்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, குளக்கரையில் மக்கள் பாா்வைக்கு சரமாகக் கோா்த்துவைக்கப்பட்டிருந்ததை ஏராளமானோா் ரசித்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...