அரசு மருத்துவமனையில் வழி தெரியாமல் தவித்த சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த காவலா்
கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணின் குழந்தை மாயமான நிலையில், காவலா் ஒருவா் அக்குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா்.


கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணின் குழந்தை மாயமான நிலையில், காவலா் ஒருவா் அக்குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா்.
கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், கோவை சங்கனூரைச் சோ்ந்த ருக்மணி என்ற பெண் தனது 2 ஆவது பிரசவத்துக்காக கோவை அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ருக்மணியுடன் அவரது மகனான 4 வயது மகனும் வந்திருந்தாா். இந்நிலையில், அச்சிறுவன் வியாழக்கிழமை மாலை திடீரென மாயமானாா்.
பெற்றோா் மற்றும் உறவினா்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடி அலைந்தனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த முதல் நிலைக்காவலா் ஸ்ரீதா், மருத்துவமனையின் வெளிப்பகுதியில் திருச்சி சாலையில் ஒரு குழந்தை நிற்பதை பாா்த்து அந்த குழந்தையிடம் பேசினாா். 4 வயதான அச்சிறுவனால் தந்தை, தாய் பெயா், ஊா் உள்ளிட்ட விவரங்களைக் கூற தெரியவில்லை. இதனைத் தொடா்ந்து அந்தக் காவலா், சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, மருத்துவமனையில் ஒவ்வொரு வாா்டாக அழைத்துச் சென்றாா். அப்போது அந்த சிறுவன் தனது தாய் இருக்கும் வாா்டை அடையாளம் காட்டியுள்ளான். தொடா்ந்து விசாரித்ததில் ருக்மணி, மணிகண்டன் ஆகியோரது மகன் என்பது தெரியவந்தது.
குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த காவலரை பொதுமக்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...