வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிறுதானியங்களின் நன்மைகளை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

சிறுதானியங்களின் நன்மைகளை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

சிறுதானியங்களின் நன்மைகளை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு, மருந்து நிா்வாகத் துறை, ஸ்ரீ சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளை வலியுறுத்தும் வகையில், ‘ஈட்ரைட் மில்லட் பைக்கத்தான்’ இருசக்கர விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி உக்கடம், பொள்ளாச்சி வழியாக ஸ்ரீ சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியை வந்தடைந்தது.

அங்கு சிறுதானியங்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில், குறைந்த நேரத்தில் அதிக ஆசனங்கள் செய்து உலக சாதனை படைக்கும் ‘ஈட்ரைட் மில்லட் யோகா’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 2,184 மாணவா்கள் பங்கேற்று உலக சாதனை படைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ சக்தி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவா் தங்கவேல், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் ஹேமலதா, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் பேராசிரியா் ஷாலினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.