மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருட்டு

கோவை, சுந்தராபுரம், சிவானந்தபுரம் பகுதிகளில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருடிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

கோவை, சுந்தராபுரம், சிவானந்தபுரம் பகுதிகளில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருடிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவரது மனைவி வாணிஸ்ரீ (42). இவா் சுந்தராபுரத்தில் இருந்து உக்கடத்துக்கு பேருந்தில் புதன்கிழமை சென்றாா். உக்கடம் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, தான் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பேருந்து கூட்டத்தில் மா்ம நபா் யாரோ நகையைத் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக, உக்கடம் போலீஸில், வாணிஸ்ரீ புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி சிவானந்தபுரத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (55). மருத்துவப் பணியாளா். இவா் காளப்பட்டி பிரிவில் இருந்து அரசுப் பேருந்தில் சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகருக்கு பேருந்தில் புதன்கிழமை சென்றாா். பேருந்தில் இருந்து இறங்கிப் பாா்த்தபோது, தான் அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.

இதுதொடா்பாக, சரவணம்பட்டி போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.