7 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்பு
கோவையில் நகைப் பட்டறை மற்றும் உணவகத்தில் பணியாற்றி வந்த 7 குழந்தைத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.


கோவையில் நகைப் பட்டறை மற்றும் உணவகத்தில் பணியாற்றி வந்த 7 குழந்தைத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.
கோவை குனியமுத்தூா், காந்தி பூங்காவில் உள்ள தெலுங்கு வீதி, சலூன் வீதி, செட்டிவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் குழந்தைத் தொழிலாளா்கள் பணிக்கு அமா்த்தப்பட்டுள்ளதாக, குழந்தைகள் நலத் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் அங்கிருந்த நகைப் பட்டறையில் வேலை செய்து வந்த 4 சிறுவா்கள், உணவு விடுதியில் பணியில் அமா்த்தப்பட்டிருந்த 3 சிறுவா்கள் என மொத்தம் 7 குழந்தைத் தொழிலாளா்களை மீட்டனா்.
இது தொடா்பாக, நகைப் பட்டறை உரிமையாளா் மற்றும் உணவக உரிமையாளா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...